தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட மாடல் அழகி !

பிரேசிலில் ஒரு இன்ஸ்டாகிராம் மாடல் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.தனது கடந்த கால உறவுகளில் ஏமாற்றமடைந்த பிறகு தன் மீது கொண்ட அன்பினால் அவர் தன்னையே திருமணம் செய்துகொண்டுள்ளார்.

33 வயதான கிரிஸ் கலெரா ஒரு மணமகளைப் போலவே வெள்ளை உடையில் இருந்தார் மற்றும் சாவோ பாலோவில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தின் முன் தனது நண்பர்களுடன் விருந்தினர்களாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரல் ஆகியுள்ளது.

மேலும் அவர் கூறியுள்ளது தனது வாழ்க்கையை தனியாக வாழவும், தனது நேரத்தையும் பணத்தையும் தனக்காக செலவிடவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் கடந்த கால உறவுகளில் அவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பும் இதற்கு காரணமாக உள்ளது.

மேலும் இது சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்யப்படும் என்று எனக்கு தெரியும் நான் இனி வெறுப்பு கருத்துக்களை படிக்க மாட்டேன் என்று முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் பிறந்தநாள் இன்று !