இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் பிறந்தநாள் இன்று !

தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கியுள்ளவர் சசிகுமார்.இவரது இயக்கத்தில் உருவான சுப்ரமணியபுரம், ஈசன் உள்ளிட்ட திரைப்படங்கள் ஒரு புது கோணத்தை தமிழ் சினிமாவிற்கு காட்டியது.

பாலா மற்றும் அமீர் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சசிகுமார்.இவர் நடித்த நாடோடிகள் படத்தின் இவரது கதாபாத்திரம் யதார்த்தமாக இருந்து.மேலும் சுந்தரபாண்டியன் படம் மூலம் அனைவரது மனதையும் கொள்ளைகொண்டர்.

மேலும் போராளி, சுந்தரபாண்டியன், தலைமுறைகள், தாரை தப்பட்டை, அப்பா, கொடிவீரர், கிடாரி போன்ற சில படங்களை தயாரித்து, அதிலும் வெற்றி கண்டார் சசிக்குமார்.

தற்போது எம்ஜிஆர் மகன், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கம்டா, நானா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.பேட்ட மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.இவர் இன்று தனது 46 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதையும் படிங்க : இன்றைய ராசி பலன் !