குமாரசாமிக்கு கொரோனா பாதிப்பு

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே குமாரசாமிக்கு மருத்துவமனையில் அனுமதி கிடைக்கவில்லை என்றும் இதற்காக மாநில சுகாதாரத்துறை அமைச்சரிடம் சென்று சிபாரிசு பெற்ற பின்னரே வேறு ஒரு மருத்துவமனையில் படுக்கைக்கு அனுமதி கிடைத்திருப்பதாகவும் ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக குமாரசாமி கூறுகையில், “மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்க வேண்டும் என்றால் சிபாரிசு தேவைப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நம்மிடம் எதுவுமே கிடையாது. தற்போது தினசரி 10,000 என்ற அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் விரைவில் இந்த எண்ணிக்கையானது 15,000 முதல் 20,000 ஆக உயரக்கூடும் என கணித்துள்ளனர். மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையை சரி செய்ய மாநில அரசு என்ன செய்துள்ளது? அவர்கள் பொதுமக்களின் வாழ்க்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.