உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்கணுமா அப்போ இதை சாப்பிடுங்கள் !

ஒரு வண்டிக்கு எப்படி என்ஜின் தான் முக்கியமோ அதேபோல் தான் மனிதனுக்கு இதயம்.இப்போதைய சுழலில் மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் உண்ணும் உணவின் மூலமாகவே எப்படி இதயத்தைப் பாதுகாக்கலாம் என்று இங்கே பார்க்கலாம்.

நாம் தினமும் தேர்ந்தெடுக்கும் உணவு மூலம் நம் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.ஆளி விதைகளில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நிறைய நார்ச்சத்துகள் உள்ளன. ஓமேகா 3 மற்றும் ஓமேகா 5 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்று.

இதயம் ஆரோக்கியமாக இருக்க உடம்பில் கொழுப்பு தங்காமல் இருந்தால் போதுமானது.இதற்கு நாம் பூண்டை அதிகம் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

உங்க இதயத்தை ஆரோக்கியமாக வைக்க ஒரு கைப்பிடியளவு நட்ஸ் போதும். அதிலும் குறிப்பாக பாதாம் மற்றும் வால்நட் பருப்புகள் இதய ஆரோக்கியத்தை கெடுக்கும் கெட்ட கொழுப்புகளை குறைக்கின்றன.

கீரையில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன. இதிலுள்ள நார்ச்சத்துகள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.தினம் ஒரு கீரை உணவில் சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது.