வன்னியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் !

தமிழ்நாட்டில் அரசு கல்வி, வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் உள்ள வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி பாமகவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

மேலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதால் இது தேர்தலில் வன்னியர்களின் வாக்குகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ற விமர்சனங்கள் எழுந்தன.

தற்போது வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி அனைத்து மறவர் நலக் கூட்டமைப்பினர் சார்பில் ராமநாதபுரம் ஆட்சியர் அலு வலகம் முன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இது பற்றி அனைத்து மறவர் நலக் கூட்டமைப்பின் ஆலோசகர் விஜயகுமார் கூறியது, மிகவும் பின்தங்கியோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர் களுக்கு மட்டும் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்துள்ளது, சீர்மரபினர் மற்றும் பிற மிகவும் பின்தங்கிய சமூகத்தினருக்கு அநீதி ஆக கருதப்படுகிறது இதனால் இதை ரத்துசெய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.