வெயில் காலம் ஆரம்பமாகிவிட்டது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள் !

வெயில் காலம் வந்த பிறகு உடலில் வெப்பம் அதிகரிக்கும்.இந்த காலகட்டத்தில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளுவது மிக அவசியம்.பொதுவாக நம் குளிக்கும் போது தலைக்கும் சேர்த்து குளிப்பது உடல் சூட்டை தணிக்க உதவும்.

இரவு தூங்க செல்லும் முன்பு கால்களில் விளக்கெண்ணெய் வைத்தால் உடல் சூடு குறையும்.நெல்லிக்காய் குளிர்ச்சியை தரக்கூடியது. எனவே கோடை காலங்களில் தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது.

தயிரை விட மோர் உடற்சூட்டை குறைப்பதில் சிறப்பாக செயல்படும். எனவே மதிய உணவில் மோரை சேர்த்துக் கொள்வது அவசியம்.

வாரம் ஒரு முறை தலையில் நல்லெண்ணெய் வைத்து குளித்து வர உடலில் சூடு ஏறாமல் தடுக்கும்.இந்த எண்ணெய் குளியலால் நம் உடலில் பலவித மாற்றங்கள் நிகழும்.காய்ந்த திராட்சை உட்கொள்வது மிகவும் நல்லது.

அதிக அளவு தண்ணீரை அருந்த வேண்டும்.இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியாகும் மேலும் உடல் குளிர்ச்சியாகும்.