முகத்தில் எண்ணெய் வழிகிறதா கவலை வேண்டாம் இதோ சில டிப்ஸ் !

ஆயில் ஸ்கின் என்றால் முகத்தில் எண்ணெய் வழிகிற தோற்றத்துடன் இருக்கும்.இந்த வகை சருமம் கொண்டவர்களுக்கு சருமத்தில் சுருக்கம் எளிதில் விழாது.

எண்ணெய் பசை சருமம் கொண்டிருப்பவர்களுக்கு முகப்பரு பிரச்சனை அதிகரிக்கும்.நீங்கள் எடுத்துகொள்ளும் உணவு உங்கள் எண்ணெய்பசையை அதிகரிக்க செய்யலாம்.

இதற்கு பேஸ் பேக் மற்றும் உணவு பழக்கமும் மிக அவசியம்.வெள்ளரிகளில் அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் உள்ளது. இது சருமத்துக்கு அவசியம் தேவையானது.

ஓட்ஸ் மற்றும் பிரவுன் ரைஸ் போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் உடலில் இருந்து நச்சுக்களை அகற்ற உதவுகின்றன. இது சருமம், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

சோயா பீன், அவகேடோ, கொட்டைகள், சால்மன் மற்றும் டுனா போன்ற உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அது சருமத்துக்கு முக்கியமானவை.