‘பறக்கும் சீக்கியர்’ மில்கா சிங் காலமானார் !

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் காலமானார்.அவருக்கு வயது 91.நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நம் நாட்டிற்காக முதல் தங்கத்தை பெற்றுத் தந்தவர்.

1958-ஆம் ஆண்டு காமென்வெல்த் போட்டியில் 400 மீட்டரில் வெற்றிப்பெற்று, இந்தியாவிற்கு முதன்முதலாக “தங்கப்பதக்கம்” பெற்றுக்கொடுத்தார் மில்கா சிங்.1959ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதும் பெற்றார் மில்கா சிங்.

மில்கா சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ,எண்ணற்ற இந்தியர்கள் இதயத்தில் சிறப்பான இட்த்தை பிடித்திருந்த ஒரு விளையாட்டு வீரரை நாம் இழந்துவிட்டோம். அவரின் உற்சாகம் ஊட்டும் பண்பு மில்லியன் கணக்கானவர்களிடம் அவரை கொண்டு சேர்த்தது. அவரின் இழப்பு பெருந்துயர் என்று பதிவிட்டுள்ளார்.

1960ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைப்பெற்ற ஓட்டப்பந்தயத்தில் வெறிக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓடி வெற்றிப்பெற்றதால், “பறக்கும் சீக்கியர்” என்று புகழப்பட்டார்.