ஆந்திராவில் கொரோனா கட்டுக்குள் வராததால் தொடரும் ஊரடங்கு !

Andhra pradesh govt
ரூ.50 லட்சம் நிவாரணம் ஆந்திர அரசு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் பரவல் அதிகம் இருந்ததால் மாநில அரசுகள் தனி தனியே ஊரடங்கை அமல்படுத்தின.இந்நிலையில்,3 ம் அலை வரும் என்று வல்லுநர்கள் எச்சரிப்பதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டுவருகின்றன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூன் 30 ஆம் தேதி வரை ஆந்திர மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிப்பதாக ஆந்திர அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

மேலும் தற்போது அங்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இருக்கிறது.தற்போது மக்களின் அத்தியாவசிய தேவைக்காக காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடைகள் இயங்கி வருகிறது.

தற்போது,காலை 6 மணி முதல் 2 மணிவரை இருந்த தளர்வுகள், இனி மாலை 6 மணிவரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் மதியம் 2 மணி வரை மட்டுமே தளர்வு அனுமதிக்கப்படுகிறது.அரசு அலுவலகங்கள் வழக்கம்போல அனைத்து ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.