வலிமை ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் ரெடி..!

அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் மொயின் அலி உள்ளிட்டோரிடம் வலிமை அப்டேட் கேட்டு வைரல் ஆக்கினார். அதேபோல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை டெஸ்ட் இறுதிப் போட்டியிலும், கால்பந்து போட்டிகளிலும் அப்டேட் கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை மோஷன் போஸ்டர் வெளியாகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.