டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையில் தீ விபத்து !

டெல்லியில் சப்தர்ஜங் பல்நோக்கு மருத்துவமனை உள்ளது.இந்த மருத்துவமனை மத்திய அரசால் இயங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த மருத்துவமனையின் ஐசியூ வார்டான தீவிர சிகிச்சை பிரிவில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை அடுத்து ஐசியூ வார்டில் இருந்த 50 நோயாளிகள் மற்ற வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.

தற்போது, 50 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை. தொடர்ந்து தீ விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.