சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தது !

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பல போராட்டங்கள் நடந்தன.சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை, சர்வதேச சந்தையில் சம்பந்தப்பட்ட பொருட்களின் விலையை சார்ந்துள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி சிலிண்டர் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைந்துள்ளது.மார்ச் மாதத்தில் சிலிண்டர் விலை 769 ரூபாயிலிருந்து 819 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 10 ரூபாய் குறைப்பதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.