முன்னாள் பிரதமர் தேவகவுடாவிற்கு கரோனா தொற்று !

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் வீச தொடங்கி உள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளது.அடுத்த படியாக கர்நாடக மாநிலத்தில் உள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் லாக்டவுன் அமல் படுத்த முடிவு இல்லை என்று எடியூரப்பா அறிவித்துள்ளார்.ஆனால் கரோனா கால விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற படும் என்று கூறினார்.

தற்போது கர்நாடகவை சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா மற்றும் அவரது மனைவி சென்னம்மா ஆகியோருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதை தேவகவுடா டிவிட் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார்.என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா சோதனை செய்துகொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.