5 மாநிலங்கள் ₹16,728 கோடி கூடுதல் கடன் பெற நிதியமைச்சகம் ஒப்புதல்

சந்தையில் இருந்து 16,728 கோடி ரூபாய் கூடுதல் கடனை திரட்ட மத்திய நிதியமைச்சகம் சில மாநிலங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு (Tamil Nadu), தெலுங்கானா (Telangana), ஆந்திரா (Andhra Pradesh), கர்நாடகா (Karnataka), மத்திய பிரதேசம் (Madhya Pradesh) என ஐந்து மாநிலங்கள் கூடுதல் கடனை பெற்றுக் கொள்ளலாம் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மாநிலங்கள் இது தொடர்பான சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ததால் இந்த 5 மாநிலங்களுக்கு இந்த விலக்கு கிடைத்துள்ளது. கொள்கை சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கான நிபந்தனையின் பேரில் கூடுதல் கடனை திரட்ட மாநிலங்களை மே மாதத்தில் அரசாங்கம் (Central Government) அனுமதித்தது.

‘மாவட்ட அளவிலான நிறுவன மேம்பாட்டு செயல் திட்டத்தின்’ (‘District Level Enterprise Improvement Action Plan)முதல் மதிப்பீடு முடிக்கப்பட வேண்டியது இந்த நிபந்தனைகளில் (Conditions) முக்கியமானது ஆகும்.