மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் !

கரோனா தொற்று தடுப்பூசி மக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கிய பிறகு நாட்டு தலைவர்கள் முன்னுதாரணமாக தாங்கள் அந்த தடுப்பூசியை முதலில் போட்டுகொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இரண்டாவது கட்டத்தின் முதல் நாளில் பிரதமர் மோடி, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இரண்டாவது நாளான நேற்று முன்தினம் மூத்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், டாக்டர் ஹர்சவர்தன், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கொரோனாவிற்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.