என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு திமுக அழைப்பு

புதுச்சேரியில் மதசார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து பாஜக உள்ளிட்ட மாற்று கட்சியில் இணைந்தனர். இதனால் அங்கே அரசியல் குழப்பம் நீடித்து வருகின்றது.

இதற்கிடையில், ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணில் தொடருமா அல்லது வேறு முடிவை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், ரங்கசாமி குழப்பத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாயின.

ஆனால், ரங்கசாமி முதலமைச்சர் பதவியைக் கேட்பதாகவும், ஆனால் பாஜக தரப்பில் அதை உறுதி செய்யவில்லை என்றும் கூறப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.