சாம்சங் அறிமுகப்படுத்திய பிரமாண்ட டிவி!

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த கண்டுபிடிப்பாக 110 இஞ்ச் மைக்ரோ எல்ஈடி டிவியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த 110 இஞ்ச் மைக்ரோ எல்இடி டிவியில் 8 மில்லியனுக்கும் அதிகமான ஆர்ஜிபி எல்இடி சிப்கள் உள்ளன. இது 4k பிக்சர் தரத்தைப் கொண்டுள்ளது. இந்தத் தயாரிப்பு மைக்ரோ AI பிராசஸர் கொண்டுள்ளது.

இந்த டிவியை மேல் நடுத்தர வர்க்கம் மக்களிடையே கொண்டுசெல்ல பலவிதமான மார்க்கெட்டிங் முயற்சிகள் மேற்கொள்கின்றனர். மைக்ரோ எல்இடி டிவி சந்தையில் அதிக பிராண்டுகள் பங்கேற்கும்பட்சத்தில் டிவியின் விலை குறைய வாய்ப்புள்ளது.

எதிர்காலத்தில் 70 இஞ்ச் முதல் 100 இஞ்ச் வரையிலான டிஸ்பிளே கொண்ட மைக்ரோ எல்இடி டிவிகளை வெளியிடுவதற்கான ஆலோசனைகள் நடைபெற்றுவருகின்றன என சாம்சங் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.