பொங்கல் பண்டிகை: பேருந்து முன்பதிவு இன்று முதல் துவக்கம்

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து முன்பதிவு இன்று முதல் துவங்கியுள்ளது. ஜனவரி மாதம் 11-ஆம் தேதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட ஆண்டுதோறும் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம். இதனால் பெரும்பாலான மக்கள் பண்டிகை நாட்களில் ஊருக்கு செல்ல அரசு பேருந்தில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக ஜனவரி மாதம் 14-ம் தேதி போகி பண்டிகை , 15-ம் தேதி தைப் பொங்கல், 16-ம் தேதி திருவள்ளூவர் தினம், 17-ம் தேதி உழவர் தினம் வருகிறது.