பிரபல பாடகர் மகேஷ் குமார் கனேடியா உடல்நலகுறைவால் காலமானார்

பிரபல பாடகருமான மகேஷ் குமார் கனேடியா உடல்நலகுறைவால் இன்று காலமானார்.

பிரபல குஜராத்தி இசையமைப்பாளரும் பின்னணி பாடகருமான மகேஷ் குமார் கனேடியா உடல்நலகுறைவால் காலமானார். இவருக்கு வயது 83.

பெண் குரல் உள்பட 32 குரல்களில் பாடும் வல்லமை படைத்தவர். குஜராத் மாநிலம் பதான் தொகுதியில் பாஜக சார்பில் 4 முறை லோக் சபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.