முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் – தமிழகம் !

கரோனா தொற்று கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவி அனைவரது வாழ்வைவும் நிலைகுலையச்செய்தது.மேலும் அதன் தாக்கம் குறைய தொடங்கியதால் அரசு சில தளர்வுகளை அறிவித்தது.இந்நிலையில்,மீண்டும் கரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

தற்போது கரோனா பரவி வரும் நிலையில் பொொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொழிற்சாலைகள், அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.மேலும் காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி கரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களின் போது பொதுமக்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.