ராஜஸ்தான் பாரன் மாவட்டத்தில் பெண் ஒருவரின் முன்னாள் கணவனின் சகோதரன், பெண்ணின் இந்நாளைய கணவன் முன்னிலையிலேயே பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு பரபரப்பாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் கணவனின் சகோதரன் மற்றும் இருவரை போலீசார் கைது செய்து ‘விசாரித்து’ வருகின்றனர்.
20-களின் வயதில் இருக்கும் அந்தப் பெண் முதல் கணவனுடன் குழந்தை பிறக்காததால் பிரிந்தார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து நாட பிராதா என்ற அங்குள்ள மரபின் படி திருமண சடங்கு இல்லாமலேயே இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார் இந்தப் பெண்.
குற்றம் செய்த நபர் சம்பவ இடத்திலிருந்து ஓடிவிட்டார். இவர்கள் பிறகு மெதுவே மெயின் ரோடுக்கு வந்துள்ளனர். அங்கு சிலரிடம் உதவி கேட்டுள்ளனர். இதனையடுத்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து 5 பேர் மீது கும்பல் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவச் சோதனை நடந்து முடிந்தது, அவரும் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது, தப்பியோடிய மற்றவர்களைப் பிடிக்கவும் வலை வீசப்பட்டுள்ளது.



