உத்தரகாண்ட் மாநிலத்தில் பின்னோக்கி ஓடிய ரயில்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ரயில் ஒன்று பின்னோக்கி 35 கிலோ மீட்டர் தூரம் ஓடி பின்னர் நின்றுள்ளது. அதில் செல்ல வேண்டிய பயணிகள் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பூர்ணகிரி ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் என்ற விரைவு ரயில் டெல்லியிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள தனாக்பூர் என்ற இடத்துக்குச் சென்று கொண்டிருந்தது. தண்டவாளத்தை விலங்கு ஒன்று கடந்ததால் ரயில் ஓட்டுநர் பிரேக்கை அழுத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி ஓட ஆரம்பித்துள்ளது.

ரயில் பின்னோக்கி ஓடியபடி வேகமாக நிலையங்களை கடப்பது காமிராக்களில் பதிவாகியுள்ளது. 35 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து அது கோடிமா என்ற இடத்தில் நின்றுள்ளது. அதிலிருந்த பயணிகள் பேருந்து மூலம் தனாக்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கு காரணம் என்ற என்று கண்டுபிடிக்க ரயில்வே தொழில்நுட்ப குழுவினர் விரைந்துள்ளனர்.