தாயை தன் கையாலேயே தூக்கிலிட்ட மகள்..!

ஈரானில், ஒரு மகள் தாயைத் தன கையினாலேயே தூக்கிலிட்டாள். அந்தப் பெண்ணுக்கு கண்ணுக்கு கண் என்ற வகையில் ‘பழிக்கு பழி’ சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டது.

அந்தப் பெண் தனது கணவரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், மரியம் கரிமி (Maryam Karimi) என்ற அந்த பெண்ணை, அவர்து மகளே மத்திய சிறையில் தூக்கிலிட்டார். தூக்கிலிடப்படுவதற்கு முன்பு மரியம் பல ஆண்டுகள் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரியம் கரிமி (Maryam Karimi) தனது கணவரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. கணவரின் சித்திரவதையை சகித்துக் கொள்ள முடியாத மரியம், கணவரிடம் விவாகரத்து கேட்டும் விவாகரத்து கொடுக்க அந்த கணவர் தயாராக இல்லை.

இந்நிலையில், மரியம் கரிமி, அவரது தந்தை ஆபிரகாமுடன் சேர்ந்து தனது கணவரை படுகொலை செய்ததாக தண்டணை விதிக்கப்பட்டது. ஆபிரகாமும் தூக்கிலிடப்பட்டாரா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. திட்டமிட்ட கொலைக்காக மரியம் மீது வழக்குத் தொடரப்பட்டது.

ஈரானில் (Iran) ‘கிசாஸ்’ (Qisas) என்று அழைக்கப்படும் ‘கண்ணுக்கு கண்’, அதாவது ரத்தத்திற்கு ரத்தம் என்ற வகையில் தண்டனை வழங்கும் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டது.