வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமயில் மழை

தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் இன்னும் சில நாட்களில் முடிவடைகிறது. பல மாவட்டங்களில் வெயில் வாட்டினாலும் சில மாவட்டங்களில் பூமி குளிர மழை பெய்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், ராமநாதபுரம் பகுதிகளில் மழை பெய்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், தக்கலை, திங்கள் சந்தை ஆகிய சுற்றுப்பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டியது கனமழை நீடிப்பதால் குளச்சல், முட்டம், மண்டைக்காடு, குறுமடை ஆகிய கிராமங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. பைபர் படகுகள், விசைபடகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.ராமநாதபுரம் மாவட்டம் , புதுகை மாவட்டம் அதன் சுற்றவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது.