ஈஸ்டர் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் !

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாளை கிறிஸ்தவர்கள் இன்று உற்சாக கொண்டாடி வருகின்றனர்.இது கிறிஸ்தவகள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழுவதை கொண்டாடும் விழாவாக இந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முன் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பு இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம்.

புனித பைபிளின் படி, புனித வெள்ளி நாளில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். அவரது கடைசி இரவு உணவிற்குப் பிறகு அவர் ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். அன்றைய தினம் தான் மவுண்டி வியாழக்கிழமை என நினைவு கூறப்படுகிறது.

அணைத்து கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றது.மேலும் தேவாலயங்களில் மக்கள் ஒன்று கூடி பிராத்தனை நடத்தி மற்றும் ஈஸ்டர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.