தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு போடப்பட்டது.மே 10 முதல் 24 வரை போடப்பட்ட பொதுமுடக்கம் தற்போது வரை தொடர்ந்துள்ளது.
மக்களுக்கு இந்த ஊரடங்கு எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்து வருகிறது.தற்போது தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது, விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலைத் தடுத்துவிட முடியும். கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் கடந்த வாரத்தில் அதிகமாகியது. அதுவும் கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது.
பொதுமக்களுக்குத் தேவையான 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு தரப்பட உள்ளது.இதனை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுகிறோம். இந்தளவுக்கு தடுப்பூசி வேறு எந்த மாநிலங்களிலும் போடப்படவில்லை.ஒரு நாளில் 1.70 லட்சம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்கிறோம். இந்தளவுக்கு பரிசோதனை வேறு எந்த மாநிலத்திலும் செய்யப்படவில்லை.
முதல் அலைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கத் தவறியதால்தான் இரண்டாவது அலையை நாம் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.இந்த இரண்டாவது அலையானது தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புக்கும், நிதி நிலைமைக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதில் இருந்து நாம் விரைவில் மீண்டாக வேண்டும்.
கொரோனா தொற்றை வெல்வோம் , நமக்கான வளம் மிகுந்த தமிழகத்தை அமைப்போம் என பேசியுள்ளார்.



