தொழில்நுட்பக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

cbse-class-12-term-1-announcement
CBSE 12 ஆம் வகுப்பு பருவம் 1

தொழில்நுட்ப கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக நடைபெற்ற முதலாம், மூன்றாம் மற்றும் ஏழாம் பருவ தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கடந்த டிசம்பர் 2020, ஜனவரி 2021 மற்றும் பிப்ரவரி 2021 ஆகிய மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தா் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 2,28,441 பேர் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 2,09,338 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் 18,529 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றும் 574 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கல்வி மாணவர்கள் www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் தேர்வு முடிவுகளை அறியலாம் என்றும் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.