தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது !

தமிழகத்தை போல புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் தொடங்கியது. இதில் கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது.

காலை மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் அணைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது.தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது.