ஜெஃப் பெசாஸ் பதவி விலகுகிறார்..!

அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமான அமேசான் தலைமைச் செயல் அதிகாரியான ஜெஃப் பெசாஸ் பொறுப்பிலிருந்து விலகவிருக்கிறார்.

பெசாஸ் இடத்துக்கு அமேசான் வெப் சர்வீசஸ் சி.இ.ஓ. ஆன்டி ஜெஸி வருகிறார். ஜெஃப் பெசாஸ் எக்சிகியூட்டிவ் சேர்மேன் பதவியை ஏற்கவிருக்கிறார்.

ஜெஃப் பெசாஸின் இந்த முடிவை வரவேற்று கூகுள் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை தன் ட்விட்டர் பக்கத்தில், “கங்க்ராட்ஸ் ஜெஃப் பெசாஸ், டே ஒன் மற்றும் எர்த் ஃபண்ட் ஆகியவற்றுக்கு வாழ்த்துக்கள். புதிய பொறுப்பேற்கும் ஜேஸிக்கும் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.