பனங்கிழங்கு சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா !

பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. மேலும் இது உடலுக்கு குளிர்ச்சி தன்மை தரக்கூடியது . மலச்சிக்கலை போன்றவற்றை தீர்க்கக்கூடியது. பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.

இதில் அதிக நார்ச்சத்து இருக்கிறது.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பனங்கிழங்குக்கு உண்டு.பனங்கிழங்கில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது இதய நோய், மற்றும் உடல் எடை குறைக்கவேண்டும் என்று நினைப்போர் இதை கட்டாயம் சாப்பிடவேண்டும் .மேலும் இது உடலுக்கு அதிக புத்துணர்ச்சி அளிக்கிறது.

பனைமரத்திருந்து கிடைக்கும் அனைத்தும் நம் உடலுக்கு சக்தி தரக்கூடியது.இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த பனங்கிழங்கை உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள்.