லூப் லபேட்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் – டாப்ஸீ !

நடிகை டாப்ஸீ தமிழ் சினிமாவில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர்.மேலும் இவர் நடித்த கேம் ஓவர் திரைப்படம் வித்தியாசமான படமாக இருக்கும்.இவர் தமிழ் மட்டும் இல்லாது ஹிந்தி திரைப்படங்களிலும் நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து நடிப்பார்.இவர் நடிப்புக்கு மக்களிடையேயே நல்ல எதிர்பார்ப்பு உண்டு.

தற்போது இவர் லூப் லபேட்டா எனும் படத்திற்காக ஃபர்ஸ்ட் லுக் போஸ் வெளியிட்டுள்ளார். அதில் அவர் டாய்லெட்டில் அமர்ந்தபடி இருக்கும் ஒரு போட்டோ இருக்கிறது. லூப் லபேட்டா எனும் படத்திற்காக இப்படியொரு போஸை நடிகை டாப்ஸி கொடுத்துள்ளார்.

மேலும் இது ஜெர்மன் மொழியில் வெளியாகி உலகம் முழுவதும் ஹிட்டான ரன் லோலா ரன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.