தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் பொங்கல் பரிசு வழங்கினார் !

தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழ்நாட்டில் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார்.

இந்த நலவாரியத்தில் இருக்கும் பதிவுசெய்துள்ள 12 லட்சத்து 69 ஆயிரத்து 550 கட்டுமான தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முதன்முறையாகத் தைப்பொங்கல் திருநாளையொட்டி வேட்டி, அங்கவஸ்தரம், சேலை, பச்சரிசி, சிறு பருப்பு, எண்ணெய் ஆகிய பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார். அதன்படி முதலில் ஏழு பேருக்குச் சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்த கரோனா தொற்றால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்கள், தைப்பொங்கல் திருநாளை சிறப்புடன் கொண்டாடும்வகையில், அரசு முதல்முறையாக, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்துள்ள கட்டுமான தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஆணையிட்டுள்ளது.

இதில் இருக்கும் ஐந்து லட்சத்து 94 ஆயிரத்து 147 ஆண் தொழிலாளர்களுக்கு வேட்டி, அங்கவஸ்தரம், ஆறு லட்சத்து 75, 403 பெண் தொழிலாளர்களுக்குப் புடவை, இரண்டு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சிறு பருப்பு, 500 கிராம் எண்ணெய், 100 கிராம் நெய், ஒரு கிலோ வெல்லம், ஐந்து கிராம் ஏலக்காய், 25 கிராம் முந்திரி, 25 கிராம் திராட்சை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட 94 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.