மக்களுக்கு கரோனா தடுப்பூசி அளிக்கப்படும் -மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் !

தமிழகம் வருகை தந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களை பேசிய அவர், ”கரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயலாற்றியதற்கு முதலமைச்சரை சந்தித்து பிரதமர் சார்பில் பாராட்டு தெரிவித்தேன். கரோனா தடுப்பூசி முன்னேற்பாடுகள் தொடர்பாக காலை முதல் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டேன். இந்த ஆய்வு மன நிறைவை அளித்துள்ளது.

மேலும் 2019 ஆம் ஆண்டு நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க திட்டமிட்டு, அதில் 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை தொடங்க தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் கூறினார்.

கரோனா தடுப்பூசி ஒத்திகை முழுமையாக முடிந்த பிறகு, கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனக் கூறினார்.