‘இரும்பு மனிதரை வணங்குகிறேன்’ – முதலமைச்சர் ட்வீட்

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் பட்டேல். இவரது பிறந்தநாளான இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து பல அரசியல் தலைவர்களும் நாட்டின் பல்வேறு இடங்களில் பட்டேலின் உருவப்படத்திற்கும், சிலைக்கும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், “புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ’இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்தம் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன்” என தெரிவித்துள்ளார்.