பெண்களை அவமதிக்கவில்லையாம்: திருமாவளவன் புதிய விளக்கம்

பெண்களை நான் அவமதிக்கவில்லை’ என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

பா.ஜ. நடத்தும் வேல் யாத்திரைக்கு தடை கோரி சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த புகார்: தமிழக பா.ஜ.வினர் நவம்பர் 6ல் இருந்து டிச. 6 வரை வேல் யாத்திரை நடத்த உள்ளனர். இது மதக் கலவரத்தை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுவதாக சந்தேகம் எழுகிறது. எனவே யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

மனு அளித்த பின் திருமாவளவன் அளித்த பேட்டி: என் வாழ்நாளில் எந்த சூழ்நிலையிலும் பெண்களை அவமதித்து பேசியது இல்லை. மனுஸ்மிருதியில் பெண்கள் குறித்து கூறப்பட்டு இருப்பதை தான் சுட்டிக்காட்டி பேசினேன். நான் பேசிய வீடியோவில் சில பகுதிகளை மட்டுமே ‘எடிட்’ செய்து மர்மநபர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். என்னை தனிமைப்படுத்துவதன் வாயிலாக தி.மு.க. கூட்டணியை பலவீனப்படுத்தலாம் என நினைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.