“எடப்பாடி தான் மீண்டும் முதல்வர்” என நெல்லை முழுக்க போஸ்டரால்.. பரபரப்பு

எடப்பாடி பழனிச்சாமி தான் 2021ம் ஆண்டிலும் மீண்டும் தமிழக முதல்வராக வருவதை பொதுமக்கள் விரும்புகிறார்கள் என நெல்லை அதிமுகவினரால் ஒட்டபட்டுள்ள போடர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வமா என்பது குழப்பமான சூழல் காணப்படுகிறது. .ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் ஓ.பி.எஸ் தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டியதால் சர்ச்சை ஏற்பட தொடங்கியது.

அதனை தொடர்ந்து இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. அதிமுக செயற்குழு கூட்டத்திலும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சர்ச்சை ஏற்பட்டது. அந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் முடிவுகள் எட்டப்படவில்லை. இந்நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை வரும் 7 ம் தேதி அறிவிப்போம் என அதிமுக தலைமைஅறிவித்துள்ளது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை அமைச்சர்களும் மூத்த நிர்வாகிகள் சந்தித்து வருகிறார்கள்.

கட்சியின் கட்டுபாட்டை மீறி முதல்வர் வேட்பாளர் என யாரையும் கூறக்கூடாது என அமைச்சர்களுக்கு வாய் பூட்டு போடப்பட்டுள்ளது.ஒற்றுமையாக கட்சியை வழி நடத்த வேண்டும் என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் விரும்புகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.