பயணம் செய்ய இ-பதிவு அவசியம்

தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே பயணம் செய்ய இ-பதிவு அவசியம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களைhttp//register.tnega.org) இணையதளத்தில் பதிவு செய்து, இ-பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.