ஆசிரியர்களுக்கு ஒரு நற்செய்தி.. டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவிப்பு !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தை அதிகம் தாக்கியது.மேலும் இந்த கொரோனா பரவல் காரணமாக பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.

டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5 ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,இந்த ஆண்டும் நல்லாசிரியர் விருது பெறுபவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட உள்ளனர்.இந்நிலையில் 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.