பாடப்புத்தகங்களில் நீக்கப்படும் சாதி பெயர்கள் !

தமிழகத்தில் உள்ள ள்ளி பாடப்புத்தகங்களில் தலைவர்களின் பெயர்களில் பின்னால் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.நடப்பு ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு புதிய பாடப் புத்தகங்கள் அளித்தது.

இந்த பாடப்புத்தகங்களில் தலைவர்களின் பெயர்களோடு வரும் சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.மேலும் +2 வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழறிஞர்களின் பெயரில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டிருக்கிறது.

இதில் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதர் என்று மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அவருக்கு பின்னால் இருந்த சாதிப் பெயரை உ.வே. சாமிநாதய்யர் என்பது இல்லை.மயூரம் வேதநாயகம் பிள்ளை என்பது வேதநாயகம் என்று அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் இனிமேல் பாடப்புத்தகங்களில் சாதி பெயர்கள் நீக்கப்பட்டே புத்தகங்கள் அச்சிடப்படும் எனவும் பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.