இந்தியா முழுவதும் 412 தூர்தர்ஷன் நிலையங்களில் தரைவழிஒளிபரப்பு நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளது. இதனால் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரமேஷ்வரத்தில் உள்ள உயர்சக்தி டிரான்ஸ்மீட்டர் மூலம் செயல்பட்டு வரும் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியின் தரைவழி ஒளிபரப்புச் சேவை வரும் 31 ஆம் தேதியுடன் நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்நிலையில் 26 ஆண்டுகள் செயல்பட்டு வந்த ராமேசுவரம் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை டிச.31-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
இந்தியா முழுவதும் 412 ஒளிபரப்பு நிலையங்கள் மூடப்படுவதன் மூலம், அங்கு நேரடியாகப் பணிபுரியும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்களின் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.



