பெட்ரோல் மீது விதிக்கப்பட்ட மதிப்பு கூட்டு வரியை (வாட்) அதிரடியாக குறைப்பதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அமைச்சரவை புதன்கிழமை கூட்டத்திற்குப் பிறகு மதிப்பு கூட்டு வரியை (வாட்) குறைக்க முடிவு செய்ததை அடுத்து, தேசிய தலைநகரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8 குறைந்துள்ளது.
புதிய குறைப்புக்குப் பிறகு, தேசிய தலைநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.95க்கு மேல்தான் இருக்கும்.கடந்த மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து டெல்லி அரசின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
நவம்பர் முதல் வாரத்தில் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது குறிப்பிடத்தக்கது.



