நடிகை ரைசாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் விளக்கம் !

நடிகை ரைசா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.சில நாட்களுக்கு முன்பு தனக்கு மருத்துவர் பைரவி செந்திலிடம் எடுக்கப்பட்ட சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர் சிகிச்சையால் தான் இப்படி ஆனது என்றும் அதற்கு ஈடாக ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பைரவி செந்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியது,முகத்தில் அழகு சேர்க்கும் சிகிச்சையை ரைஸா எடுத்துக் கொண்டதாகவும் அவருடைய ஒப்புதலின் பேரில் தான் இந்த சிகிச்சையை கொடுக்கப்பட்டது என்று கூறினார்.

இந்த சிகிச்சைக்கு பின் மூன்று நாட்களுக்கு அனைவருக்குமே முகத்தில் வீக்கம் இருக்கும் என்றும் சிகிச்சைக்கு முன்னும் பின்னும் கடைபிடிக்கவேண்டிய சில விஷயங்களை ரைசாவிற்கு எடுத்துரைத்ததாகவும் அதை செயல்படுத்தாமல் மீறினால் பக்க விளைவுகள் வரும் என்றும் பைரவி செந்தில் தெரிவித்தார்.