தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு !

Tn news: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனர்
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனர்

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

மேலும் அடுத்து வரும் 5 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.