திமுக எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் கார் விபத்தில் உயிழப்பு

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் திமுக எம்எல்ஏவுமான பிரகாஷின் மகன் கருணாசாகர் உட்பட 7 பேர் கார் விபத்தில் உயிரிழந்தனர்.

பெங்களூரு கோரமங்கலா பகுதியில் நிகழ்ந்த கார் விபத்தில் திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் உயிரிழந்தார்.

நள்ளிரவில் திமுக எம்எல்ஏ மகன் ஆடி சொகுசு காரில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் விபத்துக்குள்ளானதில் உடன் பயணித்த 6 பேரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.