யுவன் இசை இல்லாமல் உங்கள் வாழ்வில் ஒரு நாள் உண்டா?

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் 42வது பிறந்த தினம் இன்று.‘யுவன்’ என்றாலே இளமை என்றுதான் பொருள். தன் பெயருக்கேற்ப இன்று வரை தன் அதி இளமையான இசையால் ரசிகர்களைக் கட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் ‘யுவன் ஷங்கர் ராஜா’ எனும் இசையமைப்பாளனுக்கு தொடக்க காலம் அத்தனை சிறப்பானதாக அமையவில்லை.

இசையுலகின் மூம்மூர்த்திகள் யார் யாரென்று ரசிகர்கள் தீர்மானித்துவிட்ட காலத்துக்குப் பின்னால் இசைக்க வந்த யுவன், தனக்கென வேறொரு இசை யுகத்தை தகவமைத்துக்கொண்டார். இளையராஜாவிடம் இருந்து செவ்வியலான இசை மரபையும்,.. ஏ.ஆர்.ரஹ்மானின் துல்லியமான இசைப் புதுமையையும்…. ஒரே கோப்பையில் வடித்து அதனை புனித திராட்சை ரசமாக்கி இசை விருந்துப் படைத்தார்.

யுவனின் பாடல்கள் தான் இளமையும் புதுமையும் என்றால், அவரது பின்னணி இசைக்கோர்ப்பு, துயிலெழுப்பும் தூரிகையாக ரசிகர்களின் ஆன்மாவை கரைத்துவிடும், சமயங்களில் துயரங்களில் இருந்து நம்மை கரைக்கும் கொண்டு சேர்த்துவிடும்.