இருபது ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறிய அமெரிக்க ராணுவம்

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை முழுமையாக வெளியேறிவிட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. இதையடுத்து முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் ஆக்ஸ்ட் 31ஆம் தேதிக்குள் வெளியேறும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். அவ்வாறு அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே அங்கு தலிபான்கள் ஆட்சியை சுலபமாக கைப்பற்றினர். இருப்பினும் அமெரிக்கப்படைகள் அறிவித்தபடி வெளியேறும் என பைடன் கூறியிருந்தார்.

தற்போது அறிவிக்கப்பட்ட கெடுவுக்கு ஒரு நாள் முன்னதாகவே அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளன.