தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 22ஆம் தேதி மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரும் மணப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதற்கிடையே, மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இருவரும் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததன் மூலம் 2 பேரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.