தேமுதிக 16ஆவது தொடக்க விழா – கொடியேற்றிய விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தேமுதிக கொடியேற்றினார்.

தேமுதிகவின் 16ஆவது ஆண்டு துவக்க விழா இன்று கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், தலைவர் விஜயகாந்த் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் 16ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தேமுதிக கொடியேற்றியுள்ளார். இதனிடையே, தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்த ஆண்டு தேமுதிக 16ஆம் ஆண்டு துவக்க விழா மக்களுக்கு பயன்படும் வகையில் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.

மேலும் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக ஒரு அபரிதமான வெற்றி பெற்று மக்கள் சேவை ஆற்ற நாம் தயாராக வேண்டும். நல்லவர்கள் இலட்சியம், வெல்வது நிச்சயம் என்ற உறுதியோடும், இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்கே என்ற தாரகமந்திரத்தின் படி தேமுதிக தொடக்க நாளை வெகுசிறப்பாக கொண்டாட வேண்டுமென அன்போடு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தேமுதிக கட்சி கடந்த செப்டம்பர் 14, 2005இல் மதுரையில் துவக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.