கனா பட இயக்குனர் அருண்ராஜா காமராஜின் மனைவி காலமானார் !

ராஜா ராணி திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ்.இவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படத்தை இயக்கியவர்.மேலும் பாடலாசிரியர்,பாடகராக உள்ளவர்.

இவர் கடந்த 2019இல் இந்தியில் வெளியான ஆர்டிகில் 15 திரைப்படத்தைத் தமிழில் ரீமெக் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர்.

இந்நிலையில்,சில தினங்களுக்கு முன்பு அருண்ராஜா காமராஜின் மனைவிக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்று வந்தவர் நோயின் பாதிப்பு தீவிரமடைந்து நள்ளிரவு காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.