இன்று முதல் இ-பதிவு கட்டாயம் – தமிழக அரசு !

கரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

மேலும் தமிழக அரசு பிறப்பித்த புது கட்டுப்பாடுகளின்படி இன்று முதல் மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே இ-பதிவு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையில் அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் மேற்கொள்ள இ பதிவு அவசியம் என்ற புதிய கட்டுப்பாடுகள் இன்று  அமலுக்கு வந்துள்ளது.

மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை (https://eregister.tnega.org) இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.